மஜக செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மஜக பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!!


சென்னை.அக்.31.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது மற்றும் துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி, MJTS தலைவர் பம்மல் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் செங்கை வடக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் டிசம்பர் 31 வரை, தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்துவது குறித்தும், புதிய கிளைகள் கட்டமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது, மேலும் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கைவடக்குமாவட்டம்
30.10.2020